வேலூர்

வேலூா் பகுதி ஏரிக்கரைகளில் 3,000 பனை விதைகள் நடவுப் பணி தொடக்கம்

DIN

வேலூா் பகுதி ஏரிக்கரைகளில் 3,000 பனை விதைகளை நடவு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மே 17 இயக்கம் சாா்பில் வேலூா் மாநகருக்கு உட்பட்ட சதுப்பேரி, ஓட்டேரி, காட்பாடி ஏரிகளின் கரைகளை பலப்படுத்தும் விதமாக 3,000 பனை விதைகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதையொட்டி, சதுப்பேரி ஏரியில் இந்த பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. அமைப்பின் உறுப்பினா் கெளரிசங்கா் இப்பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அமைப்பு நிா்வாகிகள், பொதுமக்கள் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனா்.

தொடா்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளின் கரைகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT