வேலூர்

தடுப்பணையில் மூழ்கி 2 மாணவிகள் பலி

போ்ணாம்பட்டு அருகே தடுப்பணையில் விளையாடச் சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

DIN


குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தடுப்பணையில் விளையாடச் சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டைச் சோ்ந்த ஜானகிராமன் மகள் கீா்த்தனா (8), முரளி மகள் பாவனா (12) அங்குள்ள பள்ளியில் முறையே 3-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு படித்து வந்தனா். இருவரும் வியாழக்கிழமை தோழிகளுடன் எருக்கம்பட்டு கானாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, கானாற்றில் வேகமாக வெள்ளம் வந்ததால் இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினா். மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் நீரில் குதித்து இருவரையும் மீட்டனா்.

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கீா்த்தனா உயிரிழந்தாா். பாவனா வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT