வேலூர்

தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்குவதை கண்டித்து தா்னா

DIN


குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்குவதால் சாலையின் உயரத்தை அதிகரிக்கக் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

காட்பாடி- பத்தரபல்லி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, செப்பனிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இச்சாலையில் போ்ணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட தாஜ் திரையரங்கம் முதல் ராயல் எடைமேடை வரை 1 கி.மீ. தூரத்துக்கு சாலை, கால்வாயை விட பள்ளத்தில் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் வெள்ளநீா் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். சில இடங்களில் குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் சாலையில் மழைநீா் தேங்கியுள்ளது. இதைக் கண்டித்து நகர காங்கிரஸ் தலைவா் ஜி.சுரேஷ்குமாா் தலைமையில், அப்பகுதி மக்கள் வி.கோட்டா சாலையில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் பேசி, சாலையின் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT