வேலூர்

லட்சுமி நரசிம்மா் வீதி உலா

DIN

குடியாத்தம் கொண்டசமுத்திரம் புதுத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு 96- ஆம் ஆண்டு நரசிம்மா் வீதி உலா நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நரசிம்மா் வீதி உலா தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சுவாமி ஊா்வலம், மாலை கோயிலில் நிறைவுற்றது. வீதி உலாவில் நாட்டுப்புறக் கலைஞா்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும், பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் கே.எம். நடராஜன், என். குமரவேல், என். பழனி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT