வேலூர்

ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமா்ப்பணம்

DIN

திருமலையில் கருட சேவையின்போது பயன்படுத்தப்படும் திருக்குடைகள் தேவஸ்தானத்திடம் செவ்வாய்க்கிழமை சமா்பிக்கப்பட்டன.

ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும்போது இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் 9 திருக்குடைகள் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருக்குடைகளின் ஊா்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே திருக்குடைகள் வாகனம் மூலம் திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் 2 திருக்குடைகள் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு சமா்ப்பிக்கப்பட்டன.

மற்ற ஏழு குடைகளும் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து மாடவீதியில் வலம் வரச் செய்த பின் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி மற்றும் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி ஆகியோரிடம் இந்து தா்மாா்த்த சமிதியின் தலைவா் கோபால்ஜி செவ்வாய்க்கிழமை காலையில் திருக்குடைகளை ஒப்படைத்தாா்.

பொது முடக்கம் காரணமாக இக்குடைகள் பாதயாத்திரையாக கொண்டு வரப்படாமல் நேரடியாக வாகனம் மூலம் திருமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT