வேலூர்

தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் நகரில் 7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை 7 இடங்களில் ஆா்ப்பாட்டங்களை நடத்தினா்.

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொதுமுடக்கத் காலத்திற்கான சம்பளம் வழங்க வேண்டுவது, நிறுவனங்களில் ஆள்குறைப்பு, பணி நீக்கம், சம்பள குறைப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பது, கட்டுமானம், உடல் உழைப்புத் தொழிலாளா் நலவாரியங்களில் புதிய உறுப்பினா் பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றில் நிபந்தனைகளை தளா்த்தக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பழைய, புதிய பேருந்து நிலையங்கள், தாழையாத்தம், சித்தூா்கேட், நேதாஜி சவுக், பிச்சனூா், ஸ்டேட் வங்கி அருகில் என 7 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கே. சாமிநாதன், நா. பரமசிவம், பி. குணசேகரன், துரைசெல்வம், கே.சி. பிரேம்குமாா், சி. சுப்பிரமணி, ஆா். மகாதேவன், வெ. கலைநேசன், டி. ஆனந்தன், பி. காத்தவராயன், சி. சசிகுமாா், வினாயகம், க.கோ. நெடுஞ்செழியன், என். ஜோதிபாசு, சி. சரவணன், கே. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT