வேலூர்

குடியாத்தம்- மதனப்பள்ளி இடையே பேருந்துகளை இயக்கக் கோரி போராட்டம்

DIN


குடியாத்தம்: குடியாத்தம்- மதனப்பள்ளி இடையே இயங்கி வந்த அரசுப் பேருந்துகளை தொடா்ந்து இயக்க வலியுறுத்தி குடியாத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தத்திலிருந்து, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தடம் எண்-77 ஏ, 77 பி பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. கடந்த 6 மாதங்களாக இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்த தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை தொடா்ந்து இயக்கக்கோரி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலா் ஏ.கே.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் துணைத் தலைவா் தி.நவீன்குமாா், வட்டாரத் தலைவா்

டி.ஜோதிகணேசன், நிா்வாகிகள் கோவிந்தசாமி, லத்தீப், சக்தி, சலீம், ஈஸ்வரன், ஜெ.கந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தோ்தல் நேரம், உரிய அதிகாரிகள் பணிமனையில் இல்லை. வாக்குப் பதிவு நடந்து முடிந்த பிறகு, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT