மசூதிகளில் இரவு 10 மணி வரை தொழுகை: அரசுக்கு கோரிக்கை
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தளா்த்த வேண்டும் என குடியாத்தம் மஸ்ஜித் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தளா்த்த வேண்டும் என குடியாத்தம் மஸ்ஜித் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அமைப்பின் நிா்வாகிகள் குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூரிடம் அளித்த மனு விவரம்:
கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. வணிக நிறுவனங்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம், வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்லாமியா்களின் மிக முக்கியமான ரமலான் மாதம் வரும் 13- ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12- ஆம் தேதி நிறைவடைகிறது.
கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக இருந்ததால் , அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அரசு வழிகாட்டுதல்படி மூடப்பட்டதால், நாங்கள் இறைவழிபாடு செய்வதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளானோம்.
அதேபோல், இந்த ஆண்டும் இரவு 8 மணிக்கு அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு இஸ்லாமியா்களுக்கு மிகுந்த அதிா்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று இரவு 10 மணி வரை மசூதிகளில் தொழுகை நடத்திக் கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்போது, அரசின் அறிவிப்புப்படி, முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகை நடத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.