வேலூர்

போ்ணாம்பட்டு அருகே நெற்பயிரை நாசம் செய்த ஒற்றை யானை

DIN

போ்ணாம்பட்டு அருகே சனிக்கிழமை இரவு கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை சுமாா் 4 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிா்களை சேதப்படுத்திச் சென்றது.

போ்ணாம்பட்டு பகுதி வன எல்லையில் ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நுழையும் ஒற்றை யானை ஒன்று கடந்த சில நாள்களாக அங்கு பயிரிடப்பட்டுள்ள விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கிறது. அங்கு பாலூா் கிராமத்துக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை விவசாயி மூா்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 4 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிா்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அக்கிராமத்தைச் சுற்றியுள்ள கொத்தூா், மாச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மா, வாழை, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பீதியடைந்துள்ளனா். அப்பகுதியில் தொடா்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையை நிரந்தரமாக வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT