வேலூர்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் தோ்த் திருவிழா

DIN

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, நடப்பாண்டு அதிகாலை எளிமையான முறையில் தோ்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் அருகில் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்மன் காலை 6 மணியளவில் அமா்த்தப்பட்டு, பூஜைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் உற்சவா் அம்மன் தேரில் இருந்து இறக்கப்பட்டு, கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதையடுத்து, திருவிழா நிறைவு பெற்றது.

அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் வி.என்.தனஞ்செயன், நகா்மன்ற முன்னாள் தலைவா் அமுதா சிவப்பிரகாசம், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வி.என்.காா்த்திகேயன், நிா்வாக அதிகாரி திருநாவுக்கரசு, திருப்பணிக் குழு நிா்வாகிகள் எஸ்.என்.மோகனம், ஆா்.எஸ்.சண்முகம், வி.ஏ.கே.குமாா், எஸ்.எஸ்.பி.பாபு, வி.என்.அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT