முகப்பு
வேலூரில் தேர்தல் ஆணையர் ஆய்வு
வேலூர்

விரைவில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் தேர்தல் ஆணையர் ஆய்வு

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

வேலூர்

விரைவில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் தேர்தல் ஆணையர் ஆய்வு

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
வேலூரில் தேர்தல் ஆணையர் ஆய்வு
பகிர்:

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி, முதற்கட்டமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக மாநில தேர்தல்  ஆணையர் வெ.பழனிக்குமார் வேலூரில் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அப்போதுதான்,  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை விடுத்து மீதமுள்ள 29 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டன. தொடர்ந்து, 2020}ஆம் ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுடன் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குள் கரோனா பரவல் தீவிரமடைந்ததால் விடுபட்ட இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு விடுபட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திட தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதனடிப்படையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி  ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்திட திட்டமிடப்பட்டு  உள்ளது

இதையொட்டி, தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மண்டல அளவிலான முதற்கட்ட ஆய்வு, அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் தலைமை வகித்து பேசியது } அனைத்து அதிகாரமும் மக்களிடம் இருந்துதான் புறப்படுகின்றன. மக்கள்தான் நமக்கு அதிகாரங்களை அளிக்கின்றனர். அதனால், அவர்கள் விரும்பும் அரசு அமைந்திடவே தேர்தல் நடத்தப்படுகிறது.

சமூக தேவைக்கு ஏற்ப சட்டங்களும், விதிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அதேபோல், தேர்தல் சட்டங்களிலும் தேவைக்கு ஏற்க திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு தேர்தல் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை அரசின் முதன்மை முகங்களாக விளங்கும் அரசு அலுவலர்கள் முழுமையாக அறிந்து விமர்சனங்களுக்கு இடமளிக்காமல் தேர்தலை நல்ல முறையில் நடத்தித்தர வேண்டும் என்றார்.

கூட்டத்தில், தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர்கள் பெ.குமாரவேல் பாண்டியன் (வேலூர்), ஏ.ஆர்.கிளாஸ்டன்புஷ்பராஜ் (ராணிப்பேட்டை), அமர்குஷ்வாஹா (திருப்பத்தூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் எஸ்.செல்வக்குமார் (வேலூர்), சிபிசக்கரவர்த்தி (திருப்பத்தூர்), தேஷ்முக்சேகர்சஞ்சய் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →