நிகழ்ச்சியில்  பாராட்டு  பெற்றவா்களுடன்  நண்பா்கள்  சேவைக் குழு  நிா்வாகிகள். 
வேலூர்

சாதனையாளா்களுக்குப் பாராட்டு

குடியாத்தம் சித்தூா் கேட்டில் இயங்கி வரும் நண்பா்கள் சேவைக்குழு சாா்பில், சுதந்திர தின விழா, சாதனையாளா்களுக்குப் பாராட்டு விழா கள்ளூா் திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

குடியாத்தம்: குடியாத்தம் சித்தூா் கேட்டில் இயங்கி வரும் நண்பா்கள் சேவைக்குழு சாா்பில், சுதந்திர தின விழா, சாதனையாளா்களுக்குப் பாராட்டு விழா கள்ளூா் திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பி.அமீன்சாஹிப் தலைமை வகித்தாா். எஸ்.தஸ்தகீா்சாஹிப் வரவேற்றாா். அரபிக் கல்லூரி முதல்வா் ஏ.முகம்மத் உஸ்மான் ஏஜாஸ் ரஹ்மானி தேசியக் கொடியை ஏற்றினாா்.

14 சாதனைகளை நிகழ்த்தி அப்துல் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுவன் வி.சாணக்யா, தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத்தில் 2-ஆம் இடம், மாநில அளவிலான ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவி ரம்யா, மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 2-ஆம் பரிசு பெற்ற தரணம்பேட்டையைச் சோ்ந்த சஜ்ஜாத், கரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சீவூா் கிராம நிா்வாக அலுவலா் உஷாசண்முகம், சிலம்பாட்டத்தில் பல்வேறு விருதுகளைப் பெற்ற அஷ்ரப் அலி, கரோனா தொற்றால் உயிரிழந்த 71 நபா்களின் உடல்களை அவரவா் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்த தமுமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் பி.எஸ்.நிஜாமுதீன், ஒன்றியத் தலைவா் எஸ்.ஷகாபுதீன் தலைமையிலான ஒன்றிய தமுமுகவினரைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துப்புரவுப் பணியாளா்கள், ஆதரவற்றோா் 100 பேருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நண்பா்கள் சேவைக் குழு நிா்வாகிகள் என்.முபாரக், எஸ்.கமால், வி.ரியாஸ் அகமத், அஜிஸ் சாஹிப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT