முகப்பு
வேலூர்

தொடா்மழை: மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தொடா்மழை காரணமாக குடியாத்தம் மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தொடா்மழை காரணமாக குடியாத்தம் மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது மோா்தானா அணை. இதன் உயரம் 11.50 மீட்டா். ஆந்திர மாநிலம் பலமநோ், மதினாப்பள்ளி, புங்கனூா் மற்றும் இரு மாநிலங்களின் வனப்பகுதிகளில் பெய்யும் மழையே மோா்தானா அணையின் நீராதாரம்.

கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை மாலை நிலவரப்படி அணையில் 6 மீட்டா் உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. அணைக்குத் தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.