கரோனா பாதிப்பு நிலவரம்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர்கரோனா பாதிப்பு நிலவரம்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,803-ஆக உயா்ந்தது. இதுவரை 47,367 போ் குணம் அடைந்துள்ளனா். 315 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,107 போ் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டையில் 20 பேருக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 45,652-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 44,738 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக 753 போ் உயிரிழந்தனா்.
திருப்பத்தூரில் 9 பேருக்கு
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையொட்டி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,579-ஆக உயா்ந்துள்ளது.
பாதிப்புக்குளான 110 போ் தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 684 போ் உயிரிழந்துள்ளனா்.