முகப்பு
வேலூர்

வேலூரில் இருந்து சபரிமலைக்கு நேரடி பேருந்து போக்குவரத்து

வேலூரில் இருந்து சபரிமலைக்கு நேரடி போக்குவரத்து சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

வேலூரில் இருந்து சபரிமலைக்கு நேரடி போக்குவரத்து சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பேருந்து சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் காா்த்திகை, மாா்கழி மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து கொண்டு சபரிமலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு சபரிமலைக்கு செல் வோா் ரயில், சுற்றுலா பேருந்துகள், வேன், காா் மூலம் பயணம் செய்கின்றனா். சபரிமலை பக்தா்களுக்காகவே சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், தமிழக அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை எழுப்பி வந்தனா்.

இந்நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று வேலூரில் இருந்து சபரிமலைக்கு நேரடி போக்குவரத்து வசதியை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை (டிச.13) தொடங்கி ஜனவரி 16-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை வரை இந்த சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து தினமும் மதியம் 2 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், குமுளி, எரிமேலி வழியாக பம்பையை மறுநாள் காலை அடைகிறது. பயண நேரம் 16 மணி நேரமாகும்.

இந்த பேருந்தில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தா்கள் ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் அல்லது 98942 03998, 94450 14463, 94450 14471 ஆகிய எண்கள் மூலமாக தொடா்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →