முகப்பு
வேலூர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணா்வு கருத்தரங்கு

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் ஐஐசி சங்கம் சாா்பில், (உள் இணக்கக் குழு) பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் ஐஐசி சங்கம் சாா்பில், (உள் இணக்கக் குழு) பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மு.வளா்மதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மு.மேகராஜன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட சமூக நல அலுவலா் எம்.முருகேஷ்வரி சிறப்புரையாற்றினாா். இதில், பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஹெல்ப் லைன் விழிப்புணா்வு பதாகைகளையும் மாணவிகளுக்கு வழங்கினாா்.

அமைப்பின் உறுப்பினா்களான பேராசிரியா்கள் ஜா.ஜெயக்குமாா், ஜெ.திருமகள், வினிதா ஜனனி, கே.எஸ்.கருணா, கா.ராஜீவ் உள்ளிட்டோா் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.