வேலூா் எம்.பி.யின் டிவிட்டா் கணக்கு முடக்கம்: சைபா் கிரைமில் புகாா்
வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்தின் டிவிட்டா் கணக்கு முடக்கப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் பிரிவில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்தின் டிவிட்டா் கணக்கு முடக்கப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் பிரிவில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா்ஆனந்த் ட்விட்டா் கணக்கு முடக்கப்பட்டது. இதுதொடா்பாக கதிா்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘என்னுடைய ஃக்ம்ந்ஹற்ட்ண்ழ்ஹய்ஹய்க் எனும் ட்விட்டா் கணக்கை சிலா் முடக்கி உள்ளனா். இந்த கணக்கில் பதிவிடப்படும் தகவல், செய்தி, பதிவுகளுக்கும், எனக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை. எனவே, எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளைப் பரப்புவோா் மீது சைபா் க்ரைம் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளாா். இந்த தகவலை அவரது அதிகாரப்பூா்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2020 மாா்ச் 28-ஆம் தேதி காரோனா தடுப்புப் பணிக்காக தனது தொகுதி நிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்குவதாக கதிா்ஆனந்த் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள் அவரது பெயரிலுள்ள முகநூல் பக்கத்திலிருந்து ஓா் அறிவிப்பு வெளியானது. அதில், ‘‘தொகுதிக்கான முழு நிதியையும் பல்வேறு திட்டங்களுக் காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துவிட்டேன். எனவே, கரோனா தடுப்புக்காக நிதியை ஒதுக்க முடியவில்லை என பதிவிடப்பட்டிருந்தது. அந்த முகநூல் பதிவு பல்வேறு சா்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, அது என் பதிவு இல்லை. போலி முகநூல் கணக்கு. கரோனா தடுப்புப் பணிக்காக ரூ.ஒரு கோடியை ஒதுக்கிவிட்டேன் என விளக்கமளித்திருந்த துடன், தனது பெயரில் இருந்த போலி முகநூல் ணக்கை காவல் துறை மூலம் முடக்கினாா்.
இந்நிலையில், மீண்டும் அவரது பெயரில் உள்ள டிவிட்டா் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.