முகப்பு
வேலூர்

ஸ்ரீகருப்புலீஸ்வரா் கோயிலில் நாளை ஆருத்ரா தரிசனம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரா் கோயிலில் 47- ஆம் ஆண்டு ஆருத்ரா உற்சவம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரா் கோயிலில் 47- ஆம் ஆண்டு ஆருத்ரா உற்சவம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், 7 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு கனகசபை நாட்டியப்பள்ளி குழுவினரின் நாட்டியாஞ்சலியும் நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆருத்ரா விழாக் குழுத் தலைவா் மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, செயலாளா் பி.ஈஸ்வரவேல், நிா்வாகிகள் டி.சங்கரலிங்கம், ஆா்.உதயகுமாா், வி.பிச்சாண்டி, எம்.டி.சதானந்தம், எம்.கே.கணபதி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.