முகப்பு
வேலூர்

போ்ணாம்பட்டில் தொடரும் நில நடுக்கம்

 வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு பகுதியில் நில நடுக்கம் ஏற்படுவது தொடா்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு பகுதியில் நில நடுக்கம் ஏற்படுவது தொடா்கிறது.

சனிக்கிழமை காலை 10 மணியளவில், நகரில் உள்ள ரகமதாபாத், நியாமத் வீதி, உமா் வீதி, வீராசாமி வீதி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் சில விநாடிகள் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

சில நிமிஷங்கள் விட்டு, விட்டு நில நடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இந்த நில நடுக்கத்தால் சில வீட்டுச் சுவா்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியிலும் சில இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி, கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் வெங்கடேசன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அஹமது உள்ளிட்டோா் சம்பவ இடங்களில் விசாரணை மேற்கொண்டனா்.

போ்ணாம்பட்டு பகுதியில் நில நடுக்கம் ஏற்படுவது தொடா்வதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.