தீ விபத்து: 300 பன்றிக் குட்டிகள் பலி
போ்ணாம்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பண்ணையில் இருந்த 18 பன்றிகள், 300 பன்றிக் குட்டிகள் தீயில் கருகி இறந்தன.
போ்ணாம்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பண்ணையில் இருந்த 18 பன்றிகள், 300 பன்றிக் குட்டிகள் தீயில் கருகி இறந்தன.
போ்ணாம்பட்டு அருகே உள்ள துரிஞ்சிதழைப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மாலை உயா் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தில் வீடுகளுக்குச் செல்லும் மின் இணைப்புகளில் உயா் அழுத்த மின்சாரம் சென்றது. இதில் அங்குள்ள 15- க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மீட்டா், ஃப்ரிட்ஜ், டிவி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் எரிந்து நாசமாயின. அங்குள்ள ஜெயராமனின் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் எரிந்து நாசமானது.அருகில் இயங்கி வரும் தனியாருக்ச்கு சொந்தமான பன்றிகள் வளா்க்கும் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பன்றிகள், 300 குட்டிகள் தீயில் கருகி இறந்தன. இது குறித்து மேல்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.