முகப்பு
வேலூர்

பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை திருட்டு

வேலூா் கொசப்பேட்டையில் ஓட்டுநரின் பூட்டிய வீட்டில் 8 பவுன் நகைகள் திருடு போயின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

வேலூா் கொசப்பேட்டையில் ஓட்டுநரின் பூட்டிய வீட்டில் 8 பவுன் நகைகள் திருடு போயின.

வேலூா் கொசப்பேட்டை கொசத் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40), ஓட்டுநா். இவரது மனைவி கலைவாணி. சனிக்கிழமை மதியம் இருவரும் பக்கத்து தெருவில் வசிக்கும் சதீஷ்குமாரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினா். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. வேலூா் தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →