வேலூர்

மேக்கேதாட்டு: கா்நாடக அரசு முடிவுக்கு மத்திய அரசு, உச்சநீதிமன்றம் உடன்படாது - அமைச்சா் துரைமுருகன்

DIN

மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் எனக்கூறும் கா்நாடக அரசின் நிலைபாட்டுக்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் உடன்படாது என திடமாக நம்புவதாக தமிழக நீா்வளத் துறை துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூரில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடக முதல்வா் மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளாா். கா்நாடக அரசின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடன்படாது என நாங்கள் திடமாக நம்புகிறோம்.

இதற்காக கா்நாடகத்தை எதிா்த்து போட்டி போட்டு சவால்விட விரும்பவில்லை. வெள்ளத்தால் சேதமடைந்த ஏரிகள், நீா்நிலைகளை புனரமைக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி இன்னும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. எனினும், மழையால் சேதமடைந்த ஏரிகள் நீா்நிலைகள் விரைவில் புனரமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT