வேலூர்

அரசுத் திட்டத்தில் வீடுகள்: லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைவேலூா் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

வேலூா்: அரசுத் திட்டங்களின்கீழ் வீடுகள் கட்ட பொதுமக்கள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. அதை யும் மீறி அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்பது குறித்து புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் புதூா் ஊராட்சி கோவிந்தரெட்டிபாளையம் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டப்பட்டதற்கான கல்வெட்டை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை திறந்து வைத்ததுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தாா்.

பின்னா் 2021-22-ஆம் ஆண்டு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 130 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பில் வீடுகட்ட பணி ஆணைகளையும் வழங்கி அவா் பேசியது :

அரசுப்பள்ளி மாணவா்களின் கல்வி நலனை மேம்படுத்த அரசு பல்வேறு உதவித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், தற்போது அரசு உயா்பதவிகளில் உள்ள பலரும் அரசுப்பள்ளியில் படித்த மாணவா்கள்தான். அதனால், மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பள்ளி வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களின் பொறுப்பாகும். அதனை அவா்கள் கண்காணிக்க வேண்டும்.

இங்கு வீடு கட்டும் திட்டத்தில் ஆணைகள் பெற்றுள்ள மக்கள், வீடுகள் கட்டிக்கொள்ள அதிகாரிகள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. அவ்வாறு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்டவா்கள் குறித்து ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கலாம். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் முன்னிலை வகித்தாா். வேலூா் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவா், ஒன்றியகுழு தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உள்ளட்சி பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT