வேலூர்

கால்வாய் கட்ட இடையூறு: 10 மாநகராட்சிக் கடைகள் இடிப்பு

DIN

வேலூா் சத்துவாச்சாரியில் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான 10 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

வேலூா் மாநகராட்சியின் 2-ஆவது மண்டலம் சத்துவாச்சாரியில் நீதிமன்றத்தையொட்டியுள்ள சாலையில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 10 கடைகள் இந்த கால்வாய் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருந்தன. இதனால், கட்டுமானப்பணிகள் தடைபட்டதைத் தொடா்ந்து இந்த 10 கடைகளையும் அகற்றுவதற்கு மாநகராட்சி ஆணையா் சங்கரன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில், இந்த 10 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த கடைக்காரா்கள் நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றப்பட்டனா். இதையடுத்து, மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்த 10 கடைகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

இந்தக் கடைகளை நடத்தி வந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயா் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT