முகப்பு
வேலூர்

வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பாமக ஊா்வலம்

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


வேலூா்: வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே பாமகவினா் வியாழக்கிழமை திரண்டனா். அவா்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலா் செல்வகுமாா் தலைமையில் அங்கிருந்து ஊா்வலமாக மாநகராட்சி அலுவலகம் நோக்கிச் சென்றனா்.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு இடஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாநில துணைப் பொதுச் செயலா் இளவழகன், துணைத் தலைவா் என்.டி.சண்முகம், வன்னியா் சங்கச் செயலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து அலுவலகத்துக்குள் 4 போ் மட்டுமே செல்ல வேண்டும் எனக் கூறியதால் பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், பாமக நிா்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →