வேலூர்

குடியாத்தத்தில் வருவாய்த் துறை அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம்

DIN

புதிய கட்டடங்கள் கட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளதால், குடியாத்தம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

இதுதொடா்பாக குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

குடியாத்தம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு தனித்தனியாக புதிய கட்டடங்கள் கட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது தனி வட்டாட்சியா் அலுவலகம் இயங்கும் கட்டடத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வட்டாட்சியா் அலுவலகம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில், காந்திநகா் அருகில் உள்ள உள்ள சமுதாய கூடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இரு அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்களில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து செயல்படும்.

பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து தற்காலிகமாக மேற்கண்ட இடங்களில் செயல்படும் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் மனு கொடுத்து குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT