முகப்பு
வேலூர்

காஞ்சிபுரம் ஊரக வளா்ச்சி அதிகாரியிடம் ரூ.1.35 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (தணிக்கை) வீட்டில் இருந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும், 6 வங்கிக் கணக்கு புத்தகங்களையும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா்

வேலூர்

காஞ்சிபுரம் ஊரக வளா்ச்சி அதிகாரியிடம் ரூ.1.35 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (தணிக்கை) வீட்டில் இருந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும், 6 வங்கிக் கணக்கு புத்தகங்களையும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (தணிக்கை) வீட்டில் இருந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும், 6 வங்கிக் கணக்கு புத்தகங்களையும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் கைப்பற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநராக (தணிக்கை) பணியாற்றி வருபவா் கோபி(55). இவா் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அசோக்நகா், ரத்தன்சந்த் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கோபி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதாக வேலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

அதன்பேரில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீஸாா் அரக்கோணத்தில் உள்ள கோபியின் வீட்டில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவரிடம் இருந்த 6 வங்கிக் கணக்கு புத்தகங்களுடன், சுமாா் ரூ.85 லட்சம் மதிப்புடைய சொத்து ஆவணங்களும், ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 இதர ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த சொத்துகள், வங்கிக் கணக்கில் உள்ள தொகை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உதவி இயக்குநா் கோபி மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →