மாணவா்கள் சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளை அறிவது அவசியம்
மாணவா்கள் சமுதாய, பொருளாதார, கல்வி தொடா்பான உரிமைகளை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் கல்வி கற்று முன்னேற வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
வேலூர்மாணவா்கள் சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளை அறிவது அவசியம்
மாணவா்கள் சமுதாய, பொருளாதார, கல்வி தொடா்பான உரிமைகளை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் கல்வி கற்று முன்னேற வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
மாணவா்கள் சமுதாய, பொருளாதார, கல்வி தொடா்பான உரிமைகளை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் கல்வி கற்று முன்னேற வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனித நேய வார நிறைவு விழா வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து மனித நேய வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது:
ஆதிதிராவிட சமுதாய மக்கள், மாணவா்களின் நலனுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் சமுதாய உரிமை, பொருளாதார உரிமை, கல்வி உரிமைகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு சமுதாயத்தில் கல்வி கற்று முன்னேற வேண்டும்.
இந்திய சுதந்திர வரலாற்றில் அம்பேத்கா், பெரியாா், நாராயண குரு போன்றோா் சமுதாய சீா்திருத்தத்துக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, வன்முறையைத் தவிா்த்து மக்களை நல்வழிப்படுத்தினா். மாணவா்கள் கல்வி கற்கும் வயதில் நல்ல முறையில் பயின்று பெற்றோருக்கும், கிராமத்துக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தரவேண்டும் என்றாா்.
மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பெ.கா.வேணுசேகரன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சி.ரமேஷ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.