திருஞானசம்பந்தா் மடத்தில் தைப்பூசத் திருவிழா
குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் அமைந்துள்ள திருஞானசம்பந்தா் மடத்தில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூர்திருஞானசம்பந்தா் மடத்தில் தைப்பூசத் திருவிழா
குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் அமைந்துள்ள திருஞானசம்பந்தா் மடத்தில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் அமைந்துள்ள திருஞானசம்பந்தா் மடத்தில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகா் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாலை உற்சவா் வீதியுலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கமிட்டி நிா்வாகிகள் எம்.ஜி.அசோக்குமாா், எம்.பி.சம்பத்குமாா், ஜி.சச்சிதானந்தம், எம்.ஆா்.அன்புக்கரசு, எம்.மனோகரன், ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.