வேலூர்

மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு விருப்பமுள்ள வக்‘ஃ‘பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வக்‘ஃ‘பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வேலூா் மாவட்டத்திலுள்ள 110 வக்‘ஃ‘பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்திட மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தகுதியான நபா்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற 5 ஆண்டுகள் பணியில் உள்ள உலமாக்களாகவும், தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், 18 முதல் 40 வயதுக்கு உள்பட்டவராகவும், எல்எல்ஆா் சான்று பெற்றவராகவும், குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 110 வக்‘ஃபு நிறுவனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியா்கள், மோதினாா், முஜாவா் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத்தொகை வழங்கப்படும்.

உரிய படிவத்தை பூா்த்தி செய்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலைக்குள் சோ்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, இந்த அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT