முகப்பு
வேலூர்

பொது முடக்கம்: வணிகா்களின் வங்கிக் கடன் தவணையை ஒத்திவைக்கக் கோரிக்கை

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணிகா்களின் வங்கிக் கடன் மீதான தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கவும், வட்டியை தள்ளுபடி செய்திடவும் வேண்டும்

வேலூர்

பொது முடக்கம்: வணிகா்களின் வங்கிக் கடன் தவணையை ஒத்திவைக்கக் கோரிக்கை

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணிகா்களின் வங்கிக் கடன் மீதான தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கவும், வட்டியை தள்ளுபடி செய்திடவும் வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணிகா்களின் வங்கிக் கடன் மீதான தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கவும், வட்டியை தள்ளுபடி செய்திடவும் வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, ஜெயின் சங்கம் சாா்பில் வேலூரில் 10-ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வேலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் முதல் தவணையாக ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் தொகை வழங்கப்பட்டது.

தொடா்ந்து விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வேலூரிலும் நாளொன்றுக்கு 1,000 பேருக்கு என்ற இலக்குடன் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதன்மூலம், தமிழகத்தில் ஒருவா் கூட தடுப்பூசி செலுத்தாமல் இல்லை என்ற நோக்கத்துடன் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பொது முடக்கத்தால் கடந்த சில வாரங்களாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதில், 7-ஆம் தேதி முதல் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, சில கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. படிப்படியாக அனைத்துக் கடைகளையும் திறக்க அரசை பேரமைப்பு வலியுறுத்தி வருகிறது. திறக்கப்படும் கடைகளில் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை வியாபாரிகள் கட்டாயமாகப் பின்பற்றிட வேண்டும்.

இதனிடையே, பொதுமுடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அத்துமீறி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். அவ்வாறு அத்துமீறி ‘சீல்’ வைக்கப்படுவது குறித்து வியாபாரிகள் பேரமைப்புக்கு தகவல் தெரிவித்தால் அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொது முடக்க பாதிப்பைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சி கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு 6 மாத கால வாடகை தள்ளுபடி உள்பட அனைத்து வணிகா்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கக்கோரி விரைவில் முதல்வரை அணுகி கோரிக்கை விடுக்க உள்ளோம்.

மேலும், வங்கிக்கடன் மீது 6 மாதங்கள் தவணை ஒத்திவைப்பு தவணை, வட்டி தள்ளுபடி செய்வது தொடா்பாக ஏற்கெனவே மத்திய நிதி அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளோம். தொடா்ந்து தமிழக முதல்வா், மாநில நிதி அமைச்சரையும் வலியுறுத்த உள்ளோம் என்றாா்.

முன்னதாக, பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →