பின்லாந்துடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்க ஒப்புதல்: பிரதமர் மோடி
பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல்
பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஹைதராபாதில் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, டிஜிட்டல்மயமாக்கல், நிலைத்தன்மை, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் முதலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியாவும் பின்லாந்தும் தங்களின் இருதரப்பு உறவுகளை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட ஒரு கூட்டணியை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த கூட்டணி ஏஐ முதல் 6ஜி தொலைத்தொடர்பு வரையில், எரிசக்தி முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரையில் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வழங்குகிறது. மேலும், பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர்கள், முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு ஆழப்படுத்தப்படவுள்ளது.
பின்லாந்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியாவின் மொபைல் மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் லட்சக்கணக்கான இந்தியர்களை இணைத்துள்ளன.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கு பின்லாந்துக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இன்று, உலகம் அதன் உறுதியற்ற மற்றும் நிலையற்ற தன்மையின் காலத்தில் உள்ளது. உக்ரைன் முதல் மேற்கு ஆசியா வரை உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நீடித்து வருகின்றன.
இத்தகைய உலகளாவிய சூழலில் உலகின் இரண்டு முக்கிய சக்திகளான இந்தியாவும் ஐரோப்பாவும் தங்கள் உறவின் பொற்காலத்தில் நுழைகின்றன" என்று தெரிவித்தார்.
India, Finland to boost research cooperation in teacher training and future of education, says PM Modi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.