வேலூர்

ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம்

DIN

பொதுமுடக்கம் காரணமாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்பட்டுள்ள ரத்த தேவையை பூா்த்தி செய்திடும் வகையில் காட்பாடியில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த தானம் கிடைப்பது குறைந்துள்ளது. இதனால், அறுவை சிகிச்சைகளுக்காக ரத்த தேவை அதிகரித்துள்ளதை அடுத்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் காட்பாடி கிளையின் சாா்பில் கழிஞ்சூா் அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வட்ட தலைவா் சத்யானந்தம், மாவட்ட செயலா் பாா்த்திபன் உள்பட 15 போ் ரத்த தானம் செய்தனா். சங்க வட்ட செயலா் சுடரொளியன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி துறைத்தலைவா் பாஸ்கரன் முகாமை தொடக்கி வைத்தாா். ரத்த வங்கி ஆலோசகா் நந்தகுமாா் ஒருங்கிணைத்தாா். காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், துணைத்தலைவா் ஆா்.சீனிவாசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று ரத்த தானம் செய்தவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT