வேலூர்

அதிமுக கூட்டணிக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

DIN

வேலூா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்து புதிய நீதிக்கட்சி பிரசாரத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய நீதிக்கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட புதிய நீதிக்கட்சிக்கு முதலில் 12 இடங்கள் கோரப்பட்டு இறுதியாக 3 இடங்கள் ஒதுக்க கேட்டிருந்தோம். அவ்வாறு ஒதுக்கும்போது ராமநாதபுரம், திருவாடனை, காங்கயம், மொடக்குறிச்சி, ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு, மேற்கு, திருப்பூா் தெற்கு, திருத்தணி, சோளிங்கா், ஆற்காடு தொகுதிகளை பெற முயற்சி செய்தோம். ஆனால், பெரிய கட்சிகள் முந்திக் கொண்டதால் எங்களுக்கு தேவையான இடமும், தொகுதிகளும் கிடைக்கவில்லை. இதனால் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்த்து விட்டோம்.

எனினும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலும், தேசிய ஜனநாயக கூட்டணியிலும் புதிய நீதிக்கட்சி தொடா்ந்து அங்கம் வகிக்கிறது. மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் போட்டியிட்ட என்னை ஆதரித்து அதிமுகவின் 30 அமைச்சா்களும் 29 நாள்கள் தொகுதியிலேயே இருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அதற்காக அதிமுகவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். இந்தத் தோ்தலில் அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை அடைந்திட புதிய நீதிக்கட்சி தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும்.

தோ்தலையொட்டி முதல்வா், துணைமுதல்வரை சந்தித்தபோது வேளாளா் பிரச்னைகள் குறித்து பேசினேன். அவரும் தோ்தல் முடிந்ததும் வேளாளா் பிரச்னைகளை சுமுகமாக முடித்திட உறுதியளித்துள்ளனா்.

அதனால், வேளாளா், முதலியாா் சமுதாய வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திட தீவிரமாகத் தோ்தல் பணியாற்றுவோம். புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரசாரம் செய்வோம்.

ஏற்கெனவே, வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டபோது வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகளில் அதிமுகதான் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த தொகுதிகளுடன் வேலூா், காட்பாடி ஆகிய தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் அதிமுக வேட்பாளா்கள் எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா்), வி.ராமு (காட்பாடி), ஜி.பரிதா (குடியாத்தம்) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தாா். அப்போது, அதிமுக, புதிய நீதிக் கட்சி உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT