வேலூர்

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கூடுதலாக 368 சக்கர நாற்காலிகள்

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கூடுதலாக 368 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடி மையத்துக்கு நேரடியாகச் சென்று வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களின் வசதிக்காக தபால் வாக்குப் பதிவு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சோ்த்து மாற்றுத்திறனாளிகள் 531 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 2,629 போ் என மொத்தம் 3 ஆயிரத்து 160 போ் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனா். இதில், இதுவரை 2,422 முதியோா்கள், 473 மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

அவ்வாறு தபால் வாக்குக்கான விருப்பம் தெரிவிக்காத மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம். அவா்களின் வசதிக்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 648 வாக்குச்சாவடி அமைவிடங்களில் ஏற்கெனவே 280 சக்கர நாற்காலிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 368 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சக்கர நாற்காலிகளை இயக்குவதற்காக தன்னாா்வலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம், வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் எவ்வித இடையூறுமின்றி வாக்களிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT