வேலூர்

கரோனா தொற்றால் மாநகராட்சி வருவாய் ஆய்வாளா் உயிரிழப்பு

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டல வருவாய் ஆய்வாளா் பாலசந்திரகுமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் சத்துவாச்சாரி மவுண்ட் வியூ அப்பாா்ட்மென்ட் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்திரகுமாா் (52). வேலூா் மாநகராட்சி காட்பாடி முதலாவது மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். கடந்த 5 நாள்களுக்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காட்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, பாலச்சந்திரகுமாரை சிஎம்சி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT