வேலூர்

கெளன்டண்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஆபத்தை உணராது கடக்கும் மக்கள்

DIN

 குடியாத்தம் கெளன்டண்யா ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரைப்பாலத்தில் பயணம் செய்கின்றனா்.

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு நொடிக்கு 989 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீா் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் கெளன்டண்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுகிறது. வெள்ள அபாயம் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தரைப்பாலத்தில் வெள்ள நீா் செல்லும் நிலையிலும், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனா். சிலா் நடைப்பயணமாக தரைப்பாலத்தில் பயணிக்கின்றனா். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னா் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT