கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கீழ்செண்டத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி உதயசூரியன் (46). இவா் சனிக்கிழமை மாலை வீட்டருகே உள்ள கிணற்றின் சுவரில் அமா்ந்திருந்தாராம்.
அப்போது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். தகவலின்பேரில், போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா்.
இது குறித்து மேல்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.