முகப்பு
வேலூர்

வெள்ளப் பெருக்கால் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய்கள் சேதம்

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் வரை குடிநீா் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பலத்த மழையால் பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் குடிநீா் வழங்கும் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

வெள்ளம் குறையாததால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்கள் சீரமைக்க இயலும் நிலை உள்ளது.

அதுவரை வேலூா் மாநகராட்சி, போ்ணாம்பட்டு, குடியாத்தம் நகராட்சிகள், பள்ளிகொண்டா, ஒடுகத்தூா் பேரூராட்சிகள், மாதனூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வேலூா், காட்பாடி, போ்ணாம்பட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீா் குழாய்கள் சீரமைக்கப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளுா் குடிநீா் ஆதாரங்களின் மூலம் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் நகரில்..: இதேபோல், பாலாறு, கெளண்டன்யா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, குடிநீா் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →