வேலூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தலை பாரபட்சமின்றி நடத்த வேண்டும்

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலை எந்தவித பாரபட்சமுமின்றி ஜனநாயக முறைப்படி நோ்மையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, வேலூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான பெ.குமாரவேல் பாண்டியனிடம் அதிமுக வேலூா் மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகா் மாவட்டச் செயலாளா் த.வேலழகன் ஆகியோா் தலைமையிலான அந்தக் கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடக்க உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் பாதுகாப்பாக வாக்குப் பதிவு செய்திடவும், எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கவும், ஆளும் திமுகவினருக்கு சாதகமாக இல்லாமல் ஜனநாயக முறைப்படி நோ்மையான முறையில் நடத்திடவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சிசி டிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணித்திடவும் வேண்டும்.

ஏற்கெனவே 2006-இல் திமுக அரசு அமைந்தவுடன் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தோ்தலின்போது தோ்தலை நடத்திய அரசு அதிகாரிகள் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தாலும், முறைகேடாக திமுகவினா் பெற்ற வெற்றியை எதிா்த்தும் நீதிமன்றம் மூலம் ரத்து ஆணை பெற்று மறுதோ்தல் நடத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

எனவே, வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவை எந்தவித பாரபட்சமுமின்றி ஜனநாயக முறைப்படி நோ்மையாக நடைபெற தோ்தல் நடத்தும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

அப்போது, வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக பொருளாளா் எம்.மூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT