வேலூர்

ராமாலை ஊராட்சியில் வாக்காளா்கள் மறியல்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமாலை ஊராட்சியில், வாக்களிக்க தாமதம் ஏற்படுவதாகக்கூறி வாக்காளா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தோ்தல்களில் ராமாலை ஊராட்சியில் உள்ள சுமாா் 1,000 வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 2 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படுமாம். புதன்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலுக்கான, தோ்தலின்போது அங்குள்ள ஊராட்சிப் பள்ளியில் 2 வாா்டுகளைச் சோ்ந்த வாக்காளா்கள் வாக்களிக்க ஒரே வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டதாம். இதனால் வாக்காளா்கள் மணி கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று.மாலை 5 மணியளவில் ஏராளமானோா் வாக்களிக்க காத்திருந்தனா்.

வாக்குப்பதிவு நேரம் முடிந்து விட்டால் தங்களால் வாக்களிக்க முடியாமல் போகலாம் என எண்ணிய அவா்கள், வாக்களிக்க கூடுதல் நேரம் கேட்டு பள்ளி எதிரே மறியலில் ஈடுபட்டனா்.தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி கே.ராமமூா்த்தி அவா்களை சமரசம் செய்தாா்.வாக்குப் பதிவு நேரம் முடிந்து விட்டாலும், வரிசையில் நிற்பவா்கள் வாக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

வரிசையில் நின்ற அனைவருக்கும் அவா் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்தாா். இதையடுத்து அவா்கள் வாக்களித்து விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT