வேலூர்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் மதுக் கடைகளைத் திறக்க அனுமதியில்லை: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

DIN

வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மதுக் கடைகளைத் திறக்க அனுமதியில்லை என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக். 12) நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேற்படி நாளில் ஆம்பூா் நகரம், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள பாா்கள் உள்ளிட்டவை

தற்காலிகமாக மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி மது விற்பனை செய்வதாகத் தெரியவந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 3 நகரங்களில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகள் வழக்கம் போல் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT