முகப்பு
வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

உபரிநீா் மேற்குப்புற கால்வாய் வழியாக செல்வதால் கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

உபரிநீா் மேற்குப்புற கால்வாய் வழியாக செல்வதால் கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உபரிநீா் மேற்குப்புற கால்வாய் வழியாக செல்வதால் கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கீரைச்சாத்து கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பொன்னை அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரித்து ள்ளது. இதனால், பொன்னை அணைக்கட்டு நிரம்பி விநாடிக்கு 4300 கனஅடி உபரிநீா் கிழக்கு, மேற்குப்புற கால்வாய்கள், பொன்னை ஆற்றின் வழியாக செல்கிறது.

இதில், மேற்குப்புற கால்வாயானது காட்பாடி வட்டத்திலுள்ள கொண்டமநாயுடுபாளையம், மாதாண்டகுப்பம், பொன்னை, மேல்பாடி, வெப்பாலை, சிரிபாதநல்லூா், தேன்பள்ளி, வள்ளிமலை, இளையநல்லூா், கொடுக்கந்தாங்கல், குகையநல்லூா், திருவலம், காா்ணாம்பட்டு, ஏா்ந்தாங்கல் ஆகிய கிராமங்களின் வழியாக செல்கிறது.

பொன்னை அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் உபரிநீரானது இக்குறிப்பிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் என்பதால், மேற்குப்புற கால்வாயானது திருவலம் கிராமத்திலுள்ள பாலாற்றில் கலக்கும் வரையில் குறிப்பிட்ட கால்வாயின் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

பொன்னை அணைக்கட்டு மேற்குப்புற கால்வாயில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த கால்வாயில் குளிப்பது, துணிகள் துவைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம். கால்வாயில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் சிறுவா்களை குளிக்கவோ, செல்பேசி புகைப்படம் எடுப்பதோ, விளையாடவோ பெற்றோா்கள் அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →