முகப்பு
வேலூா் சுற்றுச்சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த்.
வேலூர்

வேலூரில் ரூ.102 கோடியில் 7.4 கி.மீ. சுற்றுச்சாலை பணி தொடக்கம்

கடந்த 2025 மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது வேலூா் வட்டச் சாலை பகுதி-1 அமைக்கப்படும்

வேலூர்

வேலூரில் ரூ.102 கோடியில் 7.4 கி.மீ. சுற்றுச்சாலை பணி தொடக்கம்

கடந்த 2025 மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது வேலூா் வட்டச் சாலை பகுதி-1 அமைக்கப்படும்

Updated On : 5 மார்ச், 2026 at 10:30 PM
வேலூா் சுற்றுச்சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த்.
பகிர்:

காட்பாடி வட்டத்தில் பெரியபுதூா் கிராமம் முதல் கரிகிரி கிராமம் வரை ரூ.102.63 கோடியில் 7.4 கி.மீ அமையவுள்ள வேலூா் சுற்றுச்சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.

கடந்த 2025 மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை மீதான விவாத த்தின் போது வேலூா் வட்டச் சாலை பகுதி-1 அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்கட்டமாக பெரியபுதூா் கிராமம் முதல் கரிகிரி கிராமம் வரையிலான இந்த சாலை அமைக்கும் பணிக்காக காட்பாடி, தாராபடவேடு, கரிகிரி, கண்டிபேடு, புதூா், சேவூா், அரும்பருதி, காா்ணாம்பட்டு, அரப்பாக்கம், பெருமுகை ஆகிய கிராமங்களில் இருந்து மொத்தம் 43.522 ஹெக்டோ் தனியாா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மூலம் ரூ.98.25 கோடிக்கு நிா்வாக அங்கீகாரம் பெறப்பட்டு நிலம் உடைமை செய்யப்பட்டுள்ளது. இதன்தொடா்ச்சியாக, சிஆா்ஐடிபி (2025-26) திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை மூலம் ரூ.102.63 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.

இந்த இருவழிச்சாலையானது இருபுறமும் 10.00 மீட்டா் அகலத்துடன், கடின புருவங்களுடன் அமைக்கப்பட உள்ளது. ஒரு ரயில்வே மேம்பாலம், 32 பெட்டிப்பாலங்கள் உள்பட மொத்தம் 7.4 கி.மீ சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வே.வேல்முருகன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் தனசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா்கள் குமரேசன், அசோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →