முகப்பு
தினமணி கதிர்

கடைசி கிராமம்...

லடாக்கின் லே மாவட்டத்துக்கு உள்பட்ட 'துர்டுக்' எனும் கிராமம் பாங்காங் தேசோ ஏரிக்குச் செல்லும் வழியில், சாங்லா மலைப் பாதைக்கும், டாங்ஸ்டே கிராமத்துக்கும் இடையே, கடல் மட்டத்திலிருந்து 3,800 கி.மீ. உயரத்தில் உள்ளது.

Updated On : 8 பிப்ரவரி 2026, 4:08 pm IST
பகிர்:

லடாக்கின் லே மாவட்டத்துக்கு உள்பட்ட 'துர்டுக்' எனும் கிராமம் பாங்காங் தேசோ ஏரிக்குச் செல்லும் வழியில், சாங்லா மலைப் பாதைக்கும், டாங்ஸ்டே கிராமத்துக்கும் இடையே, கடல் மட்டத்திலிருந்து 3,800 கி.மீ. உயரத்தில் உள்ளது.

1971-இல் முதல் நாள் பாகிஸ்தானில் இருந்தது. அடுத்த நாள் முதல் இந்திய கிராமமானது. 'இதுதான் நாட்டின் கடைசி கிராமம்' என்று கூறப்பட்டாலும், இதனைத் தாண்டி தாங் உள்ளது. அங்குச் செல்ல சில கி.மீ. பயணிக்க வேண்டும். இதற்கு இந்திய ராணுவத்தின் அனுமதி வேண்டும்.

லடாக்கில் உள்ள தூசி மூடிய நூப்ரா சாலைகளில் தூங்கும் ராட்சதர்கள் போன்ற வடிவிலான குன்றுகள், கடைசி ராணுவச் சோதனைச் சாவடியைக் கடந்து மணிக்கணக்கில் பயணித்தவுடன், பாலைவனம் திடீரெனப் பசுமையாக மாறும். அதுதான் துர்டுக்.

Advertisement

Advertisement

இங்கு பச்சை வயல்கள் மின்னும். காட்டுப் பூக்கள் சிதறும். பாதாமி மரங்கள் வழிநெடுக வரவேற்கும். கீழே முகம் பார்க்கலாம் போல் ஷியோக் நதி 'பளிச்'சென ஓடுகிறது.

செதுக்கப்பட்ட பால்கனிகள், நீலக் கதவுகளைக் கொண்ட வீடுகளுக்கு இடையே கல் பாதைகள் பின்னிப் பிணைந்துள்ளன. வழிநெடுக பாதாமி மரங்கள் மஞ்சள் பழங்களை உதிர்க்கின்றன. காற்று, மரப்புகை, ஈரமான மண், இனிப்பின் வாசனையைக் கொண்டுள்ளன.

'மலைகள் எங்கள் புதையல். கோடையில் புது பழங்களையும் குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களையும் பாதாம் மரங்கள் தருகின்றன. ஒரு புது குழந்தை பிறக்கும்போது, புதிய மரத்தை நடுகிறோம். யாராவது இறந்தால், மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவோம்' என்கின்றனர் கிராமவாசிகள்.

இந்தக் கிராமத்தில் முந்நூறு வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் முஸ்லிம்கள். இங்குள்ள 300 ஆண்டு பழமையான ஜும்மா மசூதி முற்றிலும் மரத்தாலானது. பால்டி மக்களின் பயன்பாடு அருங்காட்சியகம், மடாலயம், மத்திய போர் நினைவுச் சின்னம் ஆகியன உள்ளன. பெண்களால் நடத்தப்படும் உணவகங்களில், பாதாமி சாறு, மல்பெரி சாறு, பார்லி பீர் ஆகியவற்றை அருந்தலாம். சைவர்களுக்கு பான் கேக், சைவ பாஸ்தாக்களும் கிடைக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் பயணத்துக்குச் சிறந்ததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments