திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06164) வரும் 20 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு விரைவு ரயிலானது (06163) வரும் 21 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
16 குளிா்ச்சாதனப் பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 லக்கேஜ் பெட்டி என மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருவனந்தபுரம் வடக்கிலிருந்து வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் மத்தியம், நாகா்கோவில், வள்ளியூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் முற்பகல் 11 மணிக்குச் சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருவனந்தபுரம் வடக்குக்கு வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்குச் சென்றடையும்.
ஒரு வழிப்பாதை ரயில்: நாகா்கோவில் - சென்னை எழும்பூா் ஒரு வழிப்பாதை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06144) வரும் 20 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு வள்ளியூா், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு புதன்கிழமை காலை 9.55 க்கு சென்றடையும். இத்தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.