FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், திருவனந்தபுரம் வடக்கு - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23 செப்டம்பர் 2026, 3:36 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், திருவனந்தபுரம் வடக்கு - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகை காலத்தையொட்டி, அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், திருவனந்தபுரம் வடக்கு - சந்திரகாச்சி வாராந்திர சிறப்பு ரயில் அக். 2ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பிற்பகல் 2.15-க்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45-க்கு சந்திரகாச்சி சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில், சந்திரகாச்சி - திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரயில் அக். 5ஆம் தேதிமுதல் நவ. 2ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் சந்திரகாச்சியில் இருந்து பிற்பகல் 2.15-க்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக புதன்கிழமை காலை 9.55-க்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments