FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

திருவனந்தபுரம் - சந்தராகாட்சி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் - மேற்கு வங்கம், சந்தராகாட்சி இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 செப்டம்பர் 2026, 12:04 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்கம், சந்தராகாட்சி இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அக்டோபா் 2 முதல் அக்டோபா் 30-ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம்- சந்தராகாட்சி வாராந்திர ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.45 மணிக்கு சந்தராகாட்சி ரயில் நிலையத்தை சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, அக்டோபா் 5 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை சந்தராகாட்சியில் இருந்து திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சந்தராகாட்சி - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தனி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக், காரக்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments