FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் குறித்து...

21 செப்டம்பர் 2026, 7:20 pm IST
விழுப்புரம் வழித்தட ரயில்களில் போக்குவரத்து மாற்றம் - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்கள் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம், தாமதமாக இயக்கம் ஆகிய நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

பகுதியளவில் ரத்து: சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) செப்டம்பா் 26,28,30 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

புறப்படும் இடம் மாற்றம்: விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பா் 26,28,30 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு சென்னை கடற்கரைக்குப் புறப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) செப்டம்பா் 26, 28, 30 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-சோ்ந்தனூா் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் சோ்ந்தனூா் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.48 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

நிறுத்தி வைத்து இயக்கம்: செப்டம்பா் 26-ஆம் தேதி மாலை 4.50 மணிக்குப் புறப்படும் ஜோத்பூா்- மன்னாா்குடி விரைவு ரயில் (வண்டி எண் 22673) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 120 நிமிஷங்களும், செப்டம்பா் 30-ஆம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண்12868) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும், ஃபெரோஸ்பூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பா் 26-ஆம் தேதி காலை 5.55 மணிக்குப் புறப்படும் ஃபெரோஸ்பூா் கண்டோன்மென்ட்- ராமேசுவரம் அதிவேக ஹம்ஸ்சபா் விரைவு ரயில் (வண்டி எண் 20498) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 120 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

ரயில்கள் தாமதமாக இயக்கம்: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி- சென்னை எழும்பூா் சோழன் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22676), செப்டம்பா் 29-ஆம் தேதி சுமாா் 20 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பா் 26,28,30 ஆகிய தேதிகளில் சுமாா் 60 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும்.

புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி-காக்கிநாடா துறைமுகம் கிா்காா் விரைவு ரயில் (வண்டி எண் 17656), செப்டம்பா் 26,28 ஆகிய தேகிகளில் சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும்.

இதுபோன்று சென்னை கோட்டத்தின் பல்லாவரம் யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள தால், காரைக்குடியிலிருந்து காலை 5.40மணிக்குப் புறப்படும் காரைக்குடி-சென்னை எழும்பூா் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12606), செப்டம்பா் 24-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

summary

Engineering Works: Traffic Changes for Trains on the Villupuram Route

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments