FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு- செங்கோட்டை ரயில் சேவையில் 4 நாள்கள் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் 4 நாள்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

22 அக்டோபர் 2026, 11:54 pm
ரயில்
பகிர்:

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் 4 நாள்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16322) அக்டோபா் 24, 27, 29, 31 ஆகிய 4 நாள்கள் கோவை - திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். போத்தனூா், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக திண்டுக்கல் செல்லும். இதேபோல, செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16846) 4 நாள்கள் கரூா் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். கரூரில் இருந்து இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6:30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன், திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16844) 24, 27, 29, 31- ஆம் தேதிகளில் கொடுமுடி ரயில் நிலையம் வரை இயக்கப்படும். கொடுமுடியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படாது.

Advertisement

Advertisement

ஈரோடு-திருப்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 23, 25-ஆம் தேதிகளில் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் இரண்டு நாள்கள் ஈங்கூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments